சமுதாயம் மேன்மையடைய சமுதாயம் சமத்துவ நிலை பெற ஆடவர்களுக்கு இணையான நிலையில் பெண்களின் வாழ்க்கை நிலையும் அமைதல் வேண்டும். ஒரு சமுதாயத்தின் தரம் உயர்வடைவதும் தாழ்வடைவதும் அச்சமுதாயத்தில் வாழ்கின்ற பெண்களின் நிலையைப் பொறுத்தும் அமைகின்றது. சமுதாயம் என்பது உறவுமுறைகளாகிய வலைகளால் பின்னப்பட்ட அமைப்பு ஆகும். இவற்றில் பால் அடிப்படையில் ஆண்-பெண் என்ற உறவுமுறைகள் நிலையானதாகக் காணப்படுகின்றன. இதில் குடும்ப உறவுகளுக்கு பணிவிடை செய்தும் தன் கல்வி நிலையை உயர்த்திக் கொள்வதுமாக பெண் காணப்படுகிறாள். இங்ஙணம் வேதநாயகம் தம் படைப்புகளில் பெண்ணியம் சார்ந்த பிரச்சனைகளைப் பதிவு செய்திருப்பது அறியப்படுகிறது.
Shanlax (Sun,) studied this question.