பழிநிபாரதி கவிதைகளில் மிக நுணுக்கமான ஆழமான செறிவையும் அறிவையும் உடையவர். தமிழ்க் கவிஞர்களிலே முன்மாதிரியான பல்துறை அறிவு பெற்றவர். புரியாத புதிர் போன்ற கருத்துக்களை மக்களுக்கு எளிய முறையில் வெளிக்காட்டும் விதமாக மானிட அறிவு பெற்றவர் ஆவார். அவர் தம்முடைய கவிதைகளில் இன்றைய சமுதாயம் அடிமைப்பட்டிருப்பதை உணர்ந்து அந்நிலையிலிருந்து மீட்டு எழுச்சி பெறுவதற்கு தூண்டுதல் அளிக்கக் கூடிய கருத்துக்களை கவிஞர் தான் உணர்ந்தார் போல் கவிதைகள் மனம் உருகி படைத்துள்ளார். கவிதை வெறும் கவிதையாக இடம் பெறாமல் மக்களுக்கு உணர்ச்சியை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. வாழ்க்கை என்னும் போராட்டத்தை மாற்றி மனிதர்க்காக வாழ்க்க என்னும் புரட்சிக் கருத்துக்களையும் புதுமையாகவும் கவிதையில் உணர்த்தியுள்ளார். மேலும், சமுதாயத்தில் நடக்கக் கூடிய அவலங்களையும் எடுத்துரைப்பதோடு, அவற்றிற்கான தீர்வுகளையும் தம்முடைய கவிதைகளில் பதிவு செய்வதை அவர் தவறவில்லை என்பதை கவிதைகள் உணர்த்துகின்றன. கவிஞரின் புரட்சிக் கருத்துக்களின் மூலம் சமுதாய அக்கறையை நிலைநாட்டுவதாக அமைவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Thu,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: