தமிழ் தலைசிறந்த இலக்கிய மொழி. இலக்கியத் துறையில் இரண்டாயிரம் ஆண்டு கட்கும் முந்தைய பாரம்பரியம் கொண்டது. தமிழ் இலக்கியங்கள் தமிழர் வாழ்வை எதிரொலிப்பன. நம் தாய்மொழியான தமிழ் முன்னைப் பழமைக்குப் பழமையும், புதுமைக்குப் புதுமையும் கொண்டது. அத்தகைய இனிய மொழியைப் படைத்த தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர். அறிவியல் சிந்தனை அறிவியல் சிந்தனை என்பது, யாதொன்றையும் காரண காரியத்துடன் அலசி ஆராய்ந்து உண்மையைத் தேடுதல் அல்லது மெய்யினைக் காணுதல் என்று பொருள்படும். அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே அறிவியல். அறிவு அற்றம் காக்கும் கருவி” - (குறள்.42) என்றார் வள்ளுவர். அறிவு வளர்ச்சி இன்று உலகு தழுவி நடைபெறுவது. சமயம், தத்துவம், மொழியியல், கலை, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் எல்லா அறிவுத்துறைகளிலும் உலகின் எந்த ஒரு மூலையில் வளர்ச்சி ஏற்பட்டாலும் அது மானிடத்தின் சொத்து. வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நாகரிக வளர்ச்சியின் எல்லாக் கட்டத்திலும், எல்லாக் காலத்திலும், எல்லா நாட்டினராலும், எல்லா இனத்தினராலும் உருவாக்கப்பட்ட அறிவு முழுமைக்கும் நாமும் சொந்தக்காரர். அதில் பங்குகொள்ளும் மனப்பான்மையும் அதைப் பயன்படுத்தும் திறனும் நமக்கு வேண்டும் என்கிறார் வா.செ.குழந்தைசாமி
shanlax (Tue,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: