வாழ்க்கையின் மிகப்பெரும் உந்து சக்தி நம்பிக்கை. எதன் மீது நம்பிக்கை வைக்கின்றோமோ அதுவே வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றது. மனிதன் தன் செயலின் மீது, தன் ஆற்றலின் மீது, தன் திறமையின் மீது வைக்கின்ற நம்பிக்கை அவனை வாழ்வின் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றுரைக்கின்றார் வள்ளுவர். அவ்வாறு தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் நம்பிக்கையுடன், உயர்ந்த சிந்தனைகளுடன் வடிவமைத்துக் கொள்பவனே வாழ்வில் வெற்றியும் நிம்மதியும் அடைகின்றான். அப்படிப்பட்ட மக்களை பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் என்னும் நூல் அடையாளம் காட்டுகின்றது. இந்நூல் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மக்களைக் குறித்துப் பேசுகின்றது. ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எவ்வாறு கடக்கின்றனர் என்பதை அவர்களுடன் வாழ்ந்து உண்மைத்தன்மையோடு நான்காம் சுவராகப்படைத்திருக்கின்றார் பாக்கியம் சங்கர். அந்நூலே இவ் ஆய்வின் மூலமாக அமைகின்றது.
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: