யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் இருந்தால் நாமமால்; எதையும் சாதித்துக் காட்ட முடியும். நம்முள் நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடிய மூன்றாவது கைதான் தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் பெற்று விடலாம் தன்னம்பிக்கை மட்டும் நம்மிடம் இருந்தால். உன்னால் முடியும் தம்பி என்றார் தன்னம்பிக்கை எழுத்தாளர் ௵.கு உதயமூர்த்தி. உன்னை பலமானவன் என்று நினைத்தால் நீ பலமானவன். உன்னை நீ பலவீனமானவன் என்று நினைத்தால் பலவீனமாவாய். என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய் என்றார் விவேகானந்தர். உன்னால் முடியும் வரை முயல்வது அல்ல நீ நினைத்த செயல் முடியும் வரை முயல வேண்டும் என்றார் மாமனிதர் அப்துல் கலாம். இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் விதைத்துக் கொண்டே செல்ல வேண்டும் என்பார் முதுமுனைவர் வெ. இறையன்பு (Ias) இப்படி எல்லோரும் சொல்லும் தன்னம்பிக்கை கருத்துக்களுக்கு ஆணி வேராக தன்னம்பிக்கை சிந்தனையின் சுரங்கமாக இருப்பது நமது இலக்கியம்தான். அவற்றில் உள்ள அனைத்து கருத்துக்களும் மனித மனதில் தன்னம்பிக்கை என்னும் விதையினை விதைத்து நல்ல மனிதனாக சிறந்த பண்பாளனாக ஒழுக்கமுள்ளவனாக நேர்மறை சிந்தனையாளனாக மனிதநேயம் மிக்கவனாக வெற்றியாளனாக மாற்றிட உதவும் இலக்கியம் தான் நமது இலக்கியங்கள். அவற்றில் வெ.இறையன்பு (Ias). அவரது படைப்புக்களில் உள்ள தன்னம்பிக்கை சிந்தனை பற்றி ஆராய்வதே இவ்ஆய்வின் நோக்கமாகும்.
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: