சங்க இலக்கியக்கியமாவன எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களின் தொகுப்பாகும். இவற்றுள், பத்துப்பாட்டில், திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்ற ஐந்தும் ஆற்றுப்படை இலக்கியங்கள். இவ்விலக்கியங்களில் காணப்படும் இனக்குழு மக்கள் நிலம் சார்ந்தும், தொழில் சார்ந்தும், கலைகள் சார்ந்தும் பல்வேறுப்பட்ட இனக்குழுக்களாக இருக்கின்றனர். இனக்குழுக்களில், ஐந்திணை மக்களான குறவர், வேடர், எயினர், எயிற்றியர், இடையர், ஆமகள், பரதர், நூளைமகள், வலைஞர் ஆகியோரின் உணவுச் சேகரித்தல் முறையும், விருந்தோம்பலும் ஆற்றுப்படை இலக்கியங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இப்பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைய மக்களின் பண்பாட்டை அறிய உதவும் ஆவணமாக திகழ்கிறது.
shanlax (2025) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: