This article examines self-confidence in human development as explored in Thirukkural, indicating its significance.
மனிதன் ஒரு சமூக விலங்கு, பகுத்தறிவு உடையவன் உலக உயிர்களில் முதன்மையானவன். தானாக சிந்திக்கும இயல்பு உடையவன். தன் அறிவால் அறிவை மேம்படுத்தியவன். உலக பரிணாம வளர்ச்சியில் மனிதனும் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து உள்ளான். வேட்டை சமூகமாக இருந்த மனிதன் பல்வேறு வளர்ச்சி நிலைகளை கடந்து விண்ணுலகிற்கு சென்று வரும் அளவிற்கு வளர்ந்துள்ளான். மனிதனின் வாழ்க்கையை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கல்வியினால் ஏற்படும் அறிவு, பிறரிடம் இருந்து அல்லது சமூகத்தில் இருந்து பெறும் அறிவு. இதனை உளவியல் நோக்கில் சொல்வதென்றால் நடத்தை மாற்றம் ( Behaviour Change) என்று கூறுவர். மனிதனிடம் காணப்படுவது தினம், தினம் புதியவற்றைக் கற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வது ஆகும். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் செல்லிடப்பேசி பற்றி யாரும் அறிந்திருக்க வில்லை. ஆனால் இன்று சாதாரணக குடியானவன் முதல் அனைவரும் அதனை புழங்கும் விதத்தில் தன்னை தகவமைத்துள்ளனர். இதுவே “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” இவ்வாறு வாழாதவன் மனிதனாக மதிக்கப்படுவதில்லை.. உலகிற்கு தகுந்தார்போல தன்னை மாற்றிக் கொண்டால் தான் தனி மனிதன் முழுமை அடைகிறான். மனித சமூகத்தில்தான் பல்வேறு தனிப்பட்ட குண நலன்கள் காணப்படுகின்றன. தனது தேவைகளை பூர்த்தி செய்து முன்னேற்றம் காண்பது மனிதசமூகம் பல்வேறு காலக்கட்டங்களில் மனிதனின் சிந்தனைகளில் தடுமாற்றம் ஏற்படும். அப்போது அவன் பிறரின் அறிவுரையை கேட்டுக் கொள்வான். அல்லது தான் கற்றக் கல்வியைக் துணைக்கு அழைப்பான். சில நேரம் புத்தி இல்லாமல் துவண்டு போவதும் நடக்கும். அப்போது தேவைப்படுவது தன்னம்பிக்கை. தமிழ் இலக்கியங்களில் காலங்களினால் முந்தயது திருக்குறள். அந்த திருக்குறளில் தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களை எவ்வாறு திருவள்ளுவர் எடுத்துக் கூறுகிறார் என்பதே இக்கட்டுரை. திருக்குறளை பற்றி அனைவரும் அறிந்ததே. ஆகவே நேரடியாக தன்னம்பிக்கை சிந்தனைக்குள் சென்று விடலாம்.
No takes yet. Share an insight, caveat, or question.
shanlax (2024) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: