தமிழிலக்கியங்களில் மிகுதியாக உரை வரையப்பட்ட பெருமைக்குரிய நூல் திருக்குறள். திருக்குறளுக்குகாலந்தோறும் பல உரைகள் வெளிவந்துக் கொண்டே உள்ளன. அவை எண்ணிலடங்கா. திருக்குறளுக்குதருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதியார், பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் என்று பதின்மர் உரை எழுதியுள்ளனர். இவர்களின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை என அறிய முடிகின்றது. பதின்மருள் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய ஐவரின் உரைகளே இதுவரை கிடைத்துள்ளன. இவற்றில் பரிமேலழகர் உரையில் தொல்காப்பிய உத்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
Shanlax (Sun,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: