சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்கள் மனிதநேயக் கருத்துகளை சமுதாய நோக்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வு, ஒளவையார், காக்கைப்பாடினியார், நச்செள்ளையார் போன்ற பெண்பாற் புலவர்களின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களது மனிதநேயச் சிந்தனைகளை ஆய்வு செய்கிறது. மனிதநேயம் என்பது அன்பு, கருணை, சமத்துவம், உயிர் மதிப்பு, சமூக பொறுப்பு போன்ற கூறுகளை உள்ளடக்கியதாக இவ்வா#வில் வரையறுக்கப்படுகிறது. பெண்பாற் புலவர்களின் பாடல்களில் போர், ஈகை, காதல்,போன்ற வாழ்வியல் சூழல்கள் மையமாகக் கொண்டு மனித உணர்வுகள் வெளிப்படுகின்றன. போர் குறித்து அவர்கள் பாடும்போது வீரத்தை விட உயிரிழப்பால் ஏற்படும் துயரம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மனித உயிரின் மதிப்பு வலியுறுத்தப்படுகிறது. ஒளவையாரின் பாடல்கள் சமூகச் சமத்துவம் மற்றும் கருணையை உதவும் மனப்பான்மை மனிதநேயத்தின் அடையாளம் எனக் கூறுகிறார். செல்வம், அதிகாரம் நிலையற்றவை என்றும், அறமும் அன்பும் நிலையானவை என்றும் வலியுறுத்துகிறார். இந்த ஆய்வு, சங்ககால பெண்பாற் புலவர்கள் தனிப்பட்ட உணர்வுகளை மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த மனிதநேயச் சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது.
Shanlax (Sun,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: