எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் மனிதம் மகத்துவமானது. நவீனக் கவிதைகளில் மானுடம் எனும் இவ்வாய்வில், மனிதன் சில நேரங்களில் மானுடம் மறந்ததையும் பல நேரங்களில் மானுடம் காத்தமையும் நவீனக் கவிதைகளின் வழிநின்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நவீனக் கவிதைகள் தனக்கென தனிப்பாதைக் கொண்டு வரலாற்று வழியில் காலச்சுவடுகளைத் தொடர்ந்துப் பதிவுச் செய்து வந்துள்ளமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.நவீனக் கவிதைகள்பேசும் மானுடம் நிதர்சனத்தன்மையுடன் கூடிய இயல்பானவை என்பதை இணையத்தளத்தில் புதுக்கவிதைகளைப் படைத்துவரும்கவிஞர்களின் கவிதைகளளை மேற்கோள் காட்டி விளக்கிப் பேசப்பட்டுள்ளது. நவீனக் கவிதையின் ஆளுமைகளான பாரதியார், பாரதிதாசன், கவிக்கோ, வைரமுத்து, மேத்தா, யுகபாரதி, குட்டிரேவதி, கலாப்பிரியா ஆகியோரின் கவிதைகள் பேசும் சமுதாய, பண்பாட்டு, கலாச்சார மானுடம் விளக்கப்பட்டுள்ளது. கலைஞர் கமலஹாசன், ஈ”ா யோகாவின் சத்குரு ஜக்கிவாசுதேவ் ஆகியோரின் படைப்புகள் பேசும் வாழ்வியல் மானுடக் கவிதைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு வகையில் மானுடப் பண்பு மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும் என்ற நிதர்சனக் கருத்துக்கள் விளக்கிப் பேசப்பட்டுள்ளது.மானுடம் தழைப்பதற்கான நெறியானது உயிர்களின் அடிப்படையான ஜீவகாருண்யம் காப்பது மட்டுமே என்பது உணர்த்தப்பட்டுள்ளது. அகம் முழுதும் அறம் கொண்டு அன்பினால் தன்னை நிறைத்துக் கொள்ளுவதற்கான நெறிகள் கவிதைகள் வழிநின்று எடுத்துக்காட்டபட்டுள்ளன. மானுடம் போற்ற வாழ்வில் நல்ல உடல்நலம், உயிர்நலம், மனநலம் மூன்றோடு தீய பண்புகள் கலவாத இல்லறமும் மானுட தர்மங்களாக இருக்க வேண்டும் என்பது குறித்து நவீனக் கவிதைகளில் மானுடம் என்ற இந்த ஆய்வின் மூலம் நிறுவிக்காட்டப்பட்டுள்ளது.
shanlax (Mon,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: