தமிழிலக்கிய வரலாற்றில் சித்தர்களுக்கெனத் தனிச்சிறப்பு உண்டு. அவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் திருமூலர். அவர்தம் திருமந்திரம் வாழ்வியல் உண்மைகளை விளக்குவதோடு, இறவாத் தன்மைப் பெற்று பேரின்பப் பெருவாழ்வை அடையும் வழிமுறைகளைக் கற்றுத் தருகின்றது. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துகின்ற திருமந்திரம் ஓர் அறிவியல் நூல் என்றே குறிப்பிடலாம். காரணம், திருமந்திரத்தின் இரண்டாவது தந்திரத்தில் உள்ள கர்ப்பக் கிரியை என்ற 14ஆவது அதிகாரம் உடலைப் பாதுகாக்கும் முறைகள் தொடங்கி ஆண், பெண் உறவு நிலைகள், தாயின் வயிற்றில் கரு உருவாகும் சூழல், கருவில் இருக்கும் குழந்தையின் நிலை ஆகியவற்றை மிகநுட்பமாக எடுத்துரைக்கின்றது. இன்றைய மருத்துவ உலகிற்கும், தம்பதியர்கள் மகப்பேறு அறிவைப் பெறுவதற்கும் திருமந்திரம் துணை நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே, கருவியல் குறித்த செய்திகளைத் திருமூலர் வழிநின்று விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Tue,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: