அறிவியல் நோக்கில் தமிழ் இலக்கியங்கள் படிக்க சுவைக்க மனதிற்கு இனிமையும் வாழ்விற்கு மேன்மையும் நல்குவது இலக்கியம். கடந்த காலங்களைப் பற்றிய செய்திகளை புராணம் வரலாறு மற்றும் இலக்கியங்கள் வழியாகத்தான் அறிந்து கொள்கிறோம். மனிதன் முதன்முதலில் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தான்.பின் தன் இன பாதுகாப்பிற்கு மலைகளில் கூடி வாழ்ந்தான். அங்கு கிடைத்த உணவை உண்டு. வேட்டையாடி வாழ்ந்தான். மலைகளில் வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்று மெல்ல மெல்ல காட்டைத் திருத்தி கழனி அமைக்கக் கற்றுக்கொண்டான்.விவசாய உற்பத்தியின் பயனை அனுபவிக்க கற்றுக்கொண்ட மனிதன் நிலம் காடுகளின் பயனை அறிந்தான்.காடுகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை என்ற அளவில் காடுகளின்முக்கியத்துவம் உணர்ந்தான். தொழில் செய்யக் கற்றுக் கொண்டவன்.வணிகத்தின் சிறப்பை உணர்ந்தான். ஐம்பூதங்களையும் அடக்கி ஆள அறிவியல் துணை நாடினான். இயற்கையோடு இயைந்த பழந்தமிழர்களின் வாழ்வின் அறிவியல் முக்கிய இடம் பெறவாயின. வான். மண். காடு. கோள்கள் இவற்றை கவனிக்க கற்றுக் கொண்டான். மனிதனும் அறிவியலும் பிரிக்க முடியாத இணை கோடுகளாயின. இவ்வியலுள் மனிதர்கள் அறிவியலின் பயனை உணர்ந்தவர்கள் என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
shanlax (Fri,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: