தமிழ் இலக்கியம் காலந்தோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு, புதிய வடிவங்களையும்உள்ளடக்கங்களையும் உள்வாங்கி நாளுக்கு நாள் புதிய பரிணாம வடிவங்களைக் கொண்டுவளர்ந்து வருகிறது. ஓலைச்சுவடி, பதிப்பு, மொழிபெயர்ப்பு, ஆய்வு, திறனாய்வு எனப் பல படிநிலைகளில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களும் இன்று வளர்ந்து நம்முன் நிற்கின்றன. தமிழ் மொழியின் தொன்மை நூல்களுள் ஒன்றான திருக்குறளின் வாசிப்பானது தமிழ் இலக்கியங்களில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை பல்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் போக்கு என்று பேசும்போதெல்லாம் 19ஆம் நூற்றாண்டின் தமிழ் நிலையை ஆராய வேண்டியது ஆய்வாளர்களின் கடமையாக உள்ளது. ஏனெனில் அக்கால கட்டத்திலேயே திருக்குறளானது பதிப்புகள், உரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல நிலைகளில் தமிழர்களிடையே மட்டுமன்றிப் பிற நாட்டு அறிஞர்களிடமும் அறிமுகமாகிக் கொண்டிருந்தது
Shanlax (Sun,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: