பண்டைய கால மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் சங்க இலக்கிய நூல்களாக விளங்குபவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் ஆகும். இந்த நூல்களில் ஐந்துவகை நிலங்கள் குறித்த பதிவுகளும், அந்த நிலத்திற்குரிய ஒழுக்கத்தை மையமாக வைத்து பல பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. அதில் 'குறிஞ்சி' நில சமூகத்தை மானுடவியல் நோக்கில் ஆராவதாக இவ்வாய்வு அமைகிறது. சங்க காலத் தமிழர் வாழ்க்கை இயற்கையோடு நெருங்கிப் பிணைந்திருந்தது. அந்த இயற்கை மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கை முறைகள், பொருளாதாரம், பண்பாடு, மற்றும் சமூக உறவுகள் அமைந்திருந்தன. இதனைப் பொருத்தே தமிழர் ஐந்து நிலங்களாக தமது உலகத்தைப் பிரித்தனர் & குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என. அவற்றில் குறிஞ்சி நிலம் என்பது மலை மற்றும் மலைச் சூழலை அடிப்படையில் கொண்ட பகுதியாகும். மானுடவியல் நோக்கில் குறிஞ்சி நில சமூகம் என்பது மனிதனும் இயற்கையும் இணைப்பின் சிறந்த எடுத்துக்காட்டு. அதனை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. கலைச்சொற்கள்: சங்க இலக்கியம், குறிஞ்சி திணை, மானுடவியல் சங்ககாலம்
Shanlax Journals (Thu,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: