ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள் வெறும் போகப் பொருளாகவும், சுமைதாங்கியாகவும், குடும்பச் சுமையைச் சுமக்கும் பார வண்டிகளாகவும் இருந்து வருகின்றனர். ஆணுக்குத் தரும் சுதந்திரம, கல்வி, காதல் உணர்வுகள், வீரம் போன்ற உணர்வுகள் பெண்களுக்குத் தருவதில்லை. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்ற நான்கும் பெண்ணுக்குரிய அணிகலாகவும் “கற்பு” என்பது பெண்ணிற்கிடப்பட்ட தடுப்புச் சுவராகவும் புட்டப்பட்டன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று தங்களின் சுயத்தை அறிந்து கொண்டனர். இதனால், தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், வலிகள், சமூகக் கொடுமைகள், பாலியல் சிக்கல்கள், உடல் உணர்வுகள் ஆகியவற்றை ஆண்கள் போன்றே பெண்களும் எடுத்துக் கூறலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். இக்கட்டுரையானது கனிமொழியின் கவிதை நூல்களுள் ஒன்றான கருவறை வாசனையில் பெண்களின் நிலை பற்றி எடுத்துக் கூறுகிறது.
shanlax (Mon,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: