தமிழ் இலக்கியத்தில் மலைவாழ் மக்கள் குறித்த பல்வேறு நாவல்கள் வெளி வந்துகொண்டு இருக்கின்றன. இவை இன வரைவியல் சார்ந்த பதிவுகளைக் கொண்டனவாக பெரும்பாலும் காணப்படுகின்றன. மலைவாழ் மக்கள் முந்தைய காலத்தில் சமவெளிப் பகுதிகளில் இருந்து அழைத்துக் கொண்டு செல்லப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். தேயிலைத் தோட்டங்கள் மிகுதியாக உருவாக ஆரம்பித்த காலத்தில் அங்கு வேலை செய்வதற்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பின்பு மலைவாழ் மக்களைப் போன்று தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு சமவெளிப் பகுதியிலிருந்து தேயிலைத் தோட்டத்திற்குக் கங்காணிகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் தான் தேநீர் புதினத்தில் சுட்டப்படும் மக்கள் ஆவர். இவர்கள் கங்காணிகளாலும், துரைமார்களாலும் பெரிதும் துன்பத்தை எதிர்கொண்டனர். அத்தோடு அங்குள்ள சூழ்நிலையாலும் கடும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்பதைக் காணமுடிகிறது. அதே போல இயற்கை இடர்ப்பாடுகளையும் அவர்கள் சந்தித்தனர். உரிய வசிப்பிட வசதியும் உடை, உணவு இல்லாமையும் அவர்கள் குளிர், மலை, காட்டு விலங்குகள் ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டனர். அதே போல் குழந்தைகளின் நிலை பெரிதும் கவலைக்குரியதாக இருந்தது என்பதை தேநீர் புதினத்தின் மூலம் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். இக்கட்டுரையில் மலைவாழ் மக்கள் சந்திக்குப் பிரச்சினைகள் பற்ிறக் கூறப்படுகிறது.
shanlax (Mon,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: