அன்பும் அருளும் அறனும் பெற்று மனிதன் மேன்மை அடையும் நெறிகளில் வாழ்ந்து காட்டியவர்கள் சமயக் குரவர்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை நெறி நின்று வாழ்ந்து காட்டி பிறரையும் உயர்வு பெறுமாறு செய்தவர்கள். அந்த வகையில் பன்னிரு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையுள் ஐந்து நூல்களைப் படைத்த பட்டினத்தார் அன்பு நெறியில் நின்று இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்.தொல்காப்பியர் சுட்டும் அன்பு நெறியாகிய தலைவன்&தலைவி நெறியில் நின்று திருஏகம்பமுடையார் திருவந்தாதி என்று நூலில் இறைமேன்மையை அருளிச் செய்தார். அன்பும் காதலும் வேறு வேறுஅல்ல. ஒன்று தன்னை மறப்பது, பிரிதொன்றை மறவாதிருப்பது. இதில் “நான்”என்ற எண்ணம் அழிகிறது. கல்வியால் அறிவும், அறிவால் பக்தியும், பக்தியால் அன்பும், அன்பால் அருளும், அருளால் துறவும் வா#க்கின்றன. முதிர்ந்த அன்பே பேரின்பக் காதலாக, தலைவன்&தலைவி காதலாக மலர்கிறது. பக்தி இலக்கியங்களில் கூறப்படும் இந்த நாயக&நாயகி பாவனையின் மூலம் அத்துவித நெறி வெளிப்படுகிறது எனலாம். அதாவதுயான், எனது என்ற தன்முனைப்பற்று “அருள்வழி நிற்றல்” என்று சிவஞானபோதம் சுட்டும் நெறியே பட்டினத்தார் பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது.அத்தகைய அத்துவித நெறியை பட்டினத்தார்
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: